Maa ilai thoranam mooligai payangal
மாவிலை தோரணம் ஏன் கட்டுகிறோம்?
பொதுவாக நாம் பண்டிகை காலங்களிலும் ,வீட்டில் சுபகாரியங்கள் நிகழும் போதும் வீட்டின் வாசற்படியில் மாவிலைத் தோரணங்களை நம் முன்னோர்கள் கட்டி வந்ததற்கான காரணம் அது வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை வெளியேற்றும் சக்தி வாய்ந்தது.
மணப்பெண் மற்றும் மணமகன் வீட்டில் கட்டப்படும் மாவிலைத் தோரணங்கள் அவர்களுக்கு பயன்படுவதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்குப் பின் வரும் சந்ததிகளுக்கும் நன்மை தரும் ஆசி வழங்குவதாக கருதப்படுகிறது.
மாவிலை கிருமிகளை அழிக்கும் வல்லமை கொண்ட ஒரு கிருமி நாசினியாகும்.மேலும் இது வீட்டிலிருந்து வெளியில் இருந்து வரும் துர் தேவதைகளை வீட்டிற்குள் அண்டாமல் பாதுகாக்கும் வல்லமை கொண்டது.
மாவிலைத் தோரணங்கள் வீட்டிற்கு சுபீட்சத்தையும் லட்சுமி கடாசம் கொடுக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
மாவிலைத் தோரணங்கள் உடலுக்கு நன்மை தரும் பாக்டீரியாக்களை அதிகளவு உற்பத்தி செய்யும் வல்லமை கொண்டது. மேலும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களையும் வெளியேற்றும் சக்தி வாய்ந்தது.
இந்த மாவிலைத் தோரணங்கள் பொதுவாக மற்ற இலை தோரணங்கள் போல் அல்லாமல் அழுகாமல் நீண்ட நாட்கள் கழித்து காய்ந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments
kindly send your feed back to entertainmentsarts@gmail.com