நிலவேம்பு
மிகவும் கசப்புச் சுவையுடைய நீண்ட இலைகளையும் நாற்கோண வடிவிலமைந்த தண்டுகளையும் உடைய சிறு செடி. தமிழ் நாட்டின் சமவெளிப் பகுதிகளில் தானே வளர்கிறது. செடி முழுமையும் மருத்துவப் பயனுடையது. ஆவாரை போன்ற வெளிறிய மஞ்சள் நிறப் பூக்களையும் உடைய தரையோடு படர்ந்து வளரும் சிறு செடியினம். தென் தமிழ்நாட்டில் காணப்படுகிறது.
யாரெல்லாம் நிலவேம்பு கசாயம் எடுத்துக் கொள்ளக்கூடாது?
ஏழு வயது குறைவான குழந்தைகளுக்கு இந்த மருந்தை மருத்துவரின் பரிந்துரையில்லாமல் கொடுக்கக்கூடாது. அதேபோல் காய்ச்சல் வந்து தொடர் வாந்தி, வயிற்றுவலியால் கஷ்டப்படுகிறவர்களுக்கு இந்த கசாயம் கொடுக்கக்கூடாது